திருக்கோவிலூர் அருகே விவசாயி மகனை தாக்கி வீடு சூறை
திருக்கோவிலூர் அருகே விவசாயி மகனை தாக்கி வீடு சூறை 18 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள காட்டுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம். இவரது மகன் பாரதி என்கிற பார்த்திபன். இவரது நண்பர் வசந்த் என்பவரின் செல்போன் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு திருடு போய்விட்டது. செல்போன் திருடிய நபர்களை பார்த்தீபன் கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து செல்போனையும் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. இதனால் செல்போன் திருடிய கும்பலுக்கு பார்த்தீபன் மீது முன் விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த தங்கராசு மகன் ஜெயதாஸ், அவரது மனைவி மகேஸ்வரி, தம்பி விஜயகுமார், சுரேஷ் மனைவி விஜயலட்சுமி, ரா
ஜேந்திரன் மனைவி பாக்கியலட்சுமி, வெங்கடேசன் மகன் விக்னேஷ், தண்டபாணி மகன் பாரதி மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் பாரதியின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடினர். அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சாதிபதியின் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்ததாக கூறபடுகிறது.
இதுகுறித்து பார்த்திபன் தந்தை ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் ஜெயதாஸ், மகேஸ்வரி, விஜயகுமார் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சாதிபதி உள்ளிட்ட 18 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story