தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Sept 2021 11:13 PM IST (Updated: 17 Sept 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் உள்ள பகுதிகளில் புகார் பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் உள்ள பகுதிகளில் புகார் பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
வழிகாட்டி பலகையை சூழ்ந்த மரங்கள்
காரைக்கால்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் அம்மாசத்திரம் அருகே வாகன ஓட்டிகளின் வசதிக்காக ஊர் பெயர் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழிகாட்டி பலகையை சுற்றிலும் கருவேல மரங்கள் சூழ்ந்து பலகை வெளியே தெரியாத அளவுக்கு வளர்ந்துள்ளன.இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வருபவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்றி ஊர் பெயர் வழிகாட்டி பலகை வெளியே தெரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-ஜான் மேத்யூ, காரைக்கால்.
ஆபத்தான மின்கம்பம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் உள்ள 7-வது வார்டு பழவனகுடிதெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள இரும்பு உடைந்து உள்ளது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் நிற்கிறது. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-நாகராஜன், பழவனகுடி
குண்டும், குழியுமான சாலை 
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வாழ்க்கை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் மேலத்தெருவில் இருந்து புத்தகலூர் மற்றும் எரவாஞ்சேரி செல்லும் பிரதான சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.மேலும் இந்த சாலை வழியாகத்தான் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், கிராம அங்காடி, துணை பொது சுகாதார நிலையம், சமுதாயக்கூடம், நூலகம், விவசாய நிலங்களுக்கு, காளியம்மன் கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இத்தகைய போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
அருண்குமார், வாழ்க்கை கிராமம்.
குளம் தூர்வாரப்படுமா
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த சோதியக்குடி பகுதியில் சிம்பரநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சிவன் கோவில் அருகே உள்ள குளம் கிராம மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் குளம் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. அதுமட்டுமின்றி குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் மற்றும் படித்துறைகள் அமைக்கப்படவில்லை. இதனால் குளிக்க செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். மேலும், குளம் சீராக இல்லாமல் பள்ளமும், மேடாகவும் சீரற்ற முறையில் கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை சீரமைத்து, படித்துறைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-கிராமவாசிகள், சிரம்பரநாதபுரம்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கற்பகநாதர்குளம் தெற்கு பகுதியில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி மிகவும் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.குறிப்பாக நீர்தேக்கதொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றனர்.இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-தட்சணா மூர்த்தி, கற்பகநாதர்குளம், திருத்துறைப்பூண்டி.

Next Story