திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம். நாளை நடக்கிறது
500 வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்
அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 வாக்குச்சாவடி மையங்கலில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த கொரோனா தடுப்பூசி முகாமை விவசாய பெருமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அறக்கட்டளைகளை சேர்ந்தவர்கள், ரோட்டரி, அரிமா சங்கங்கள், அரசு சாரா நிறுவனர்கள், வணிக நிறுவனங்களை சார்ந்தவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பொது மக்கள் பயன்படுத்தி கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story