இளம்பெண்ணிடம் ரூ.5 லட்சம் வரதட்சனை கேட்டு கொடுமை


இளம்பெண்ணிடம் ரூ.5 லட்சம் வரதட்சனை கேட்டு கொடுமை
x
தினத்தந்தி 18 Sept 2021 12:17 AM IST (Updated: 18 Sept 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

ரூ.5 லட்சம் வரதட்சனை கேட்டு கொடுமை

வேலூர்

வேலூர் சலவன் பேட்டை காமராஜ்நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி (20). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் புவனேஸ்வரியிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புவனேஸ்வரி முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தார். தனிப்பிரிவு அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் வேலூர் அனைத்து மகளிர் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு புவனேஸ்வரியை கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story