சிவகங்கை பா.ஜனதா பிரமுகர் கொலையில் 3 பேர் கைது


சிவகங்கை பா.ஜனதா பிரமுகர் கொலையில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Sept 2021 12:47 AM IST (Updated: 18 Sept 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை பா.ஜனதா பிரமுகர் கொலையில் 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

சிவகங்கை 

சிவகங்கை பா.ஜனதா பிரமுகர் கொலையில் 3 பேரை போலீசார் கைது ெசய்தனர்.
பா.ஜனதா பிரமுகர் கொலை
சிவகங்கை நகர் நெல்மண்டி தெருவில் வசித்து வந்தவர் முத்துப்பாண்டி (வயது 43). இவர் சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. மீனவர் பிரிவின் மாவட்ட துணைத்தலைவராக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் முத்துப்பாண்டி அவருடைய வீட்டிலிருந்து அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார்.
 அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஓட, ஓட முத்துப்பாண்டியை விரட்டி வெட்டினார்கள். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக  சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
11 பேர் மீது வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட செந்தில்குமார் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வைரவன்பட்டியை சேர்ந்த கருப்பு ராஜ்குமார், செல்வேந்திரன், பாண்டிய ராஜா, ராஜேஸ் மற்றும் வாணியங்குடியை சேர்ந்த குட்டைசங்கர் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறும் போது,
கடந்த 2016-ம் ஆண்டு சிவகங்கையை அடுத்த சாமியார்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற கொலைக்கு பழிக்குப்பழியாக முத்துபாண்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளது என்றார்.
3 பேர் கைது
கொலை செய்யபட்ட முத்துப்பாண்டியின் உடல் பிரேத பரிசோதனை சிவகங்கை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.அதன் பின்னர் அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான வைரவன்பட்டிக்கு எடுத்து செல்லபட்டது. முன்னதாக முத்துப்பாண்டியின் உடலுக்கு பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா, மாவட்ட தலைவர் மேப்பல்சக்தி, நகர் தலைவர் தனசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் வைரவன்பட்டியை சேர்ந்த சுகுமார் (27) பால்பாண்டி (22) மற்றும் செல்வேந்திரன் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்ற பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story