தீக்குளித்த பெண் சாவு
தீக்குளித்த பெண் பரிதாபமாக இறந்தார்.
முக்கூடல்:
ஆழ்வார்குறிச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா என்ற பச்சை பெருமாள். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி நித்யா (வயது 20). இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. பின்னர் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக, நித்யா கணவரை விட்டு பிரிந்து, முக்கூடலில் கம்பளத்தார் தெருவில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தாார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 10-ந் தேதி நித்யாவிடம் செல்போனில் ராஜா தகராறு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த நித்யா தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நித்யா நேற்று இறந்தார். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சேரன்மாதேவி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story