இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு


இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 18 Sept 2021 12:54 AM IST (Updated: 18 Sept 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

தாயில்பட்டி அருகே இருசக்கர வாகனத்திற்கு மர்மநபர்கள் தீவைத்தனர்.

தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள சல்வார்பட்டியை சேர்ந்தவர் கவியரசன் (வயது 30). இவர் வீட்டிற்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கினார். பின்னர் நள்ளிரவில் பயங்கர சத்தம் கேட்டதால், அவரும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது கவியரசனின் இருசக்கரவாகனம் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசில் கவியரசன் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story