2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே போர்டு ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 58). முன்னாள் ராணுவ வீரர்.
இவர் அங்குள்ள ஒரு இடத்தில் கட்டிடம் கட்டியுள்ளார். இந்தநிைலயில் கடந்த 28-11-2016-ந் தேதியன்று 6 வயதுடைய 2 சிறுமிகளை அந்த கட்டிடத்துக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அத்துடன் கொலை மிரட்டலும் விடுத்தார்.
60 ஆண்டு சிறை
இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி தனசேகரன் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக முன்னாள் ராணுவ வீரர் நடராஜூவுக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story