பெரியார் பிறந்த நாள் விழா
காரைக்குடி, இளையான்குடியில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காரைக்குடி,
காரைக்குடி, இளையான்குடியில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தி.மு.க.
காரைக்குடியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் மண்டலத்தலைவர் சாமி திராவிடமணி தலைமையில் மாவட்ட தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் வைகறை, தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் நகர செயலாளர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப சின்னத்துரை, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, தொ.மு.ச. கவுரவத்தலைவர் வைரவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் சார்பில் மாங்குடி எம்.எல்.ஏ. நகர காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன், நகர செயலாளர் குமரேசன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, முன்னாள் நகர தலைவர் சிவானந்தம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
ம,தி.மு.க.
ம.தி.மு.க. சார்பில் நகரச்செயலாளர் சேது தியாகராஜன் தலைமையில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பசும்பொன் மனோகரன். நகர தலைவர் ஆட்டோ பழனி. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார். மாநில செயலாளர்கள் பெரியசாமி, இளைய கவுதமன் மாவட்ட துணை செயலாளர் காக்கூர் தமிழேந்தி.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஏ.ஐ. டி.யு.சி மாநில துணைச் செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், நகரச் செயலாளர் சீனிவாசன் ,நகர துணை செயலாளர் ராஜா, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் சின்னக்கண்ணன் மாவட்டக்குழு உறுப்பினர் கருப்புசாமி, ஆகியோர் மாலை அணிவித்து சமூக நாள் நீதி நாள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இளையான்குடி
பெரியார் பிறந்த நாளையொட்டி இளையான்குடி ஒன்றிய பேரூர் தி.மு.க சார்பில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ சுப.மதியரசன், பேரூர் செயலர் நஜிமுதீன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, மாவட்ட பிரதிநிதி செய்யதுகான், தவுலத், பேரூர் இளைஞரணி பைரோஸ்கான், இளைஞரணி ராஜேந்திரன், வக்கீல் பார்த்தசாரதி, அழகேசன், சத்தியேந்திரன் தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன், இப்ராகிம், ஆரிப், அஜீத்கான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
-------
Related Tags :
Next Story