பாய் நாற்றங்கால் மூலம் எந்திர நடவு
காரியாபட்டி பகுதியில் பாய் நாற்றங்கால் மூலம் எந்திர நடவு செய்யப்பட்டு வருகிறது.
காரியாபட்டி,
காரியாபட்டி வட்டாரத்தில் புது முயற்சியாக முடுக்கன்குளம் மங்கலநாதன் என்ற விவசாயி எம். இலுப்பை குளத்தில் உள்ள நிலத்தில் பாய் நாற்றங்கால் முறையில் எந்திர நடவு மூலம் 8 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- பாய் நாற்றங்கால் முறைக்கு 14 முதல் 18 நாள் வயதுள்ள நாற்றுகளே போதுமானது. ஒரே அளவுள்ள நாற்றுக்கள் சீரான இடைவெளியில் ஒரு குத்துக்கு 2 முதல் 3 நாற்றுக்களே போதும். மகசூலை பொருத்தமட்டில் சாதாரண நடவினை காட்டிலும் 500 முதல் 700 கிலோ ஒரு எக்ேடருக்கு கூடுதலாக கிடைக்கும் இது மட்டுமின்றி தற்போது நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை குறைக்கவும், நோய் மற்றும் பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாத்து கொள்ள போதுமான இடைவெளி கடைபிடிக்கவும் எந்திர நடவினை கடைப்பிடிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story