மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி + "||" + vaccination camp held in above 500 center Tommorrow

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 672 மையங்களில் நடக்கிறது. இந்த முகாமில் 76 ஆயிரத்து 821 பேருக்கு தடுப்பூசி செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 672 மையங்களில் நடக்கிறது. இந்த முகாமில் 76 ஆயிரத்து 821 பேருக்கு தடுப்பூசி செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
நாளை சிறப்பு முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பேசியதாவது
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான அளவில் முகாம் நடைபெறும் நேரத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் வட்டாரம் வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
76,821 பேருக்கு தடுப்பூசி
வட்டார பொறுப்பு அலுவலர்கள் தங்கள் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி முகாம் நடைபெறும் பகுதிகளில் முன்னேற்பாடுகளை கண்காணிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை அங்கு செய்து கொடுக்க வேண்டும். முகாம்களில் கூடுதல் தடுப்பூசி தேவை ஏற்பட்டால் மருத்துவ துறையினரையும், வருவாய்த்துறையினரையும் தொடர்பு கொண்டு தேவையான எண்ணிக்கையில் தடுப்பூசி பெற்று வழங்க வேண்டும். வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து முகாமை சிறப்பாக நடத்த வேண்டும்.
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20 லட்சத்து 77 ஆயிரத்து 95 பேர் உள்ளனர். இதுவரை 13 லட்சத்து 81 ஆயிரத்து 390 பேர் முதல் தவணையும், 2 லட்சத்து 62 ஆயிரத்து 252 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 6 லட்சத்து 95 ஆயிரத்து 705 பேருக்கு முதல் தவணையும், உரிய காலத்துக்குள் இரண்டாம் தடுப்பூசி போட வேண்டிய 1 லட்சத்து 32 ஆயிரத்து 866 பேருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த 12-ந் தேதி நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 163 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் 76 ஆயிரத்து 821 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
672 மையங்கள்
நாளை 672 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி தடுப்பூசி முகாம் நடக்கும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடி, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பணிக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த பணியாளர்கள், தன்னார்வலர்கள் 2 ஆயிரத்து 688 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு குலுக்கல் முறையில் விதவிதமான பரிசு
சென்னையில் கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு குலுக்கல் முறையில் விதவிதமான பரிசு வழங்கப்பட்டது. மாநகராட்சியின் கவனம் ஈர்க்கும் நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிகிறது.
2. மதுரையில் ஒரே நாளில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மதுரையில் நேற்று 1200 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
3. 81 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் 81 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
4. 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு, பில்கேட்ஸ் பாராட்டு
100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக இந்தியாவுக்கு, பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
5. கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு - அமெரிக்க ஆய்வு முடிவு
கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் என அமெரிக்க ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.