தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகை
வெள்ளகோவில் அருகே தென்னை நார் மில்லை மூடக்கோரி அந்த தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் அருகே தென்னை நார் மில்லை மூடக்கோரி அந்த தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தென்னை நார் தொழிற்சாலை
வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் பொன்பரப்பியில் தனியாருக்கு சொந்தமான தென்னைநார் காயர் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு பி.ஏ.பி. கிளை பாசன வாய்க்காலில் இருந்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பயன்படுத்துவதாகவும், இந்த தொழிற்சாலையால் நிலத்தடி நீர், காற்று மாசுபடுகிறது. எனவே இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
மின் இணைப்பு உடனே துண்டிக்க வேண்டும். இந்த தொழிற்சாலையால் சிகாரிபுரம், பொன்பரப்பி பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை தென்னைநார் தொழிற்சாலை முன்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கேயம் தாசில்தார் சிவகாமி, நில வருவாய் அலுவலர் நிர்மலாதேவி, பி.ஏ.பி.பாசன உதவி பொறியாளர் பாஸ்கர், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இ்ந்த நிலையில் பி.ஏ.பி. பாசன கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருடி தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததற்கு வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் பி.ஏ.பி.பாசனத் உதவி பொறியாளர் பாஸ்கர், புகார் மனு கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story