இன்றும், நாளையும் படகு போக்குவரத்து ரத்து


இன்றும், நாளையும் படகு போக்குவரத்து ரத்து
x

விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றும், நாளையும் படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரி:
சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்தநிலையில் சமீபத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து மீண்டும் சுற்றுலாதலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அங்கு விடுமுறை நாட்களில் பொழுதை கழிக்க கூட்டம், கூட்டமாக மக்கள் திரண்டதால் கொரோனா பரவல் மீண்டும் உச்சத்தை தொடுமோ என்ற அச்சம் உருவானது.
இதனை தொடர்ந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் சுற்றுலாதலங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த சில வாரங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இன்றும், நாளையும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story