விபத்தில் காதலன் இறந்ததால் இளம்பெண் தற்கொலை
சாம்ராஜ்நகரில் விபத்தில் காதலன் இறந்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது.
கொள்ளேகால்:
விபத்தில் காதலன் சாவு
சாம்ராஜ்நகர் தாலுகா பண்டிகெரே கிராமத்தை சேர்ந்தவர் பூஜா. இவருக்கு, சந்துகட்டிமோளே கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு விபத்தில் மகேஷ் இறந்துவிட்டார்.
காதலன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த பூஜா, மனநலம் பாதித்தவர் போல் ஆகிவிட்டார். அவர், யாருடனும் பேசாமல் தனியாக சோகத்தில் இருந்து வந்துள்ளார்.
இளம்பெண் தற்கொலை
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது பூஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சாம்ராஜ்நகர் புறநகர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்னர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட பூஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில், விபத்தில் காதலன் இறந்த துக்கத்தில் மனமுடைந்து பூஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சாம்ராஜ்நகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாம்ராஜ்நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story