சேலம் மாவட்டத்தில் புதிதாக 63 பேருக்கு கொரோனா-ஒருவர் பலி
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் பலியாகி உள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 20 பேர், ஓமலூரில் 9 பேர், எடப்பாடியில் 5 பேர், கொங்கணாபுரம், நங்கவள்ளி, சங்ககிரி, வீரபாண்டி, மேட்டூர் நகராட்சி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், பனமரத்துப்பட்டியில் 2 பேர் மற்றும் கொளத்தூர், மேச்சேரி, சேலம் ஒன்றியம், ஆத்தூர், அயோத்தியாபட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் நகராட்சி, நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் தலா ஒருவரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 63 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் சேலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.
Related Tags :
Next Story