அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை


அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
x
தினத்தந்தி 18 Sept 2021 5:33 PM IST (Updated: 18 Sept 2021 5:33 PM IST)
t-max-icont-min-icon

பவுர்ணமி நாளான்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

பவுர்ணமி நாளான்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். 

இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி வரை உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பவுர்ணமியன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு வருகைதர வேண்டாம். 

இந்நாளில் ஆகம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் நடைபெறும். மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய உதவிட வேண்டும். 

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Next Story