தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி


தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 18 Sept 2021 6:29 PM IST (Updated: 18 Sept 2021 6:29 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கி தேசிய ஊட்டச்சத்து வார விழாவை யொட்டி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருவள்ளூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் பர்க்கத்துல்லா கான், தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் டாக்டர் எஸ். ஜெயபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதிநாதன், வெங்கடேசன், மேலாளர் சேகர், ஈக்காடு ஊராட்சி மன்ற தலைவர் லாசனா சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியானது முக்கிய சாலைகள் வழியாக திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

Next Story