கடையில் ரூ.1 லட்சம் திருடிய ஓட்டல் ஊழியர் கைது
கடையில் ரூ.1 லட்சம் திருடிய ஓட்டல் ஊழியர் கைது
கூடலூர்
கூடலூர் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் இருந்து தேவர்சோலை செல்லும் சாலையில் கருவாட்டுக் கடை நடத்தி வருபவர் உம்மர். கடந்த 1 ½ மாதங்களுக்கு முன்பு வழக்கம் போல இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதைதொடர்ந்து கூடலூர் போலீசில் உம்மர் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கருவாடு கொள்முதல் செய்வதற்காக ரூ.1 லட்சம் பணம் வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் நேற்று கூடலூர் எஸ் எஸ் நகரைச் சேர்ந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர் கருவாட்டுக் கடையில் ரூ.1 லட்சம் பணம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீம் (வயது 25) என்பவரை கைது செய்தனர். இவர் கருவாட்டுக் கடையில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story