பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 18 Sept 2021 10:10 PM IST (Updated: 18 Sept 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

கே.வி.குப்பம் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

கே.வி.குப்பம் அருகே வேப்பநேரியைச் சேர்ந்தவர் உமாபதி. அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். 

இவரது மனைவி மகேஸ்வரி (வயது 55), டீக்கடை அருகில் போண்டா கடை நடத்தி வருகிறார். இவர்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 

பிள்ளையார் கோவில் தெரு வழியே சென்றபோது மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த வந்த 2 வாலிபர்கள் மகேஸ்வரி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை அறுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். 

இதுகுறித்து உமாபதி கொடுத்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story