தேர்தல் அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு


தேர்தல் அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு
x
தினத்தந்தி 18 Sept 2021 10:11 PM IST (Updated: 18 Sept 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் அலுவலர்களை கணினி குலுக்கல் முறைகளில் பணியமர்த்தும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 543 வாக்குச்சாவடி மையங்களில் ஒரு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவும். 621 வாக்குச்சாவடி மையங்களில் 2 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக அடுத்த மாதம் 6 மற்றும் 9&ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

மொத்தமுள்ள 1,164 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 9,383 அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட அளளவில் முதல் சீரற்றமயமாக்கல் மற்றும் ஒன்றிய அளவில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களால் இரண்டாவது சீரற்றமயமாக்கல் பணிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (உள்ளாட்சி தேர்தல்) செல்வன், ஹரிஹரன், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story