கடலூாில் 53 வீடுகளில் முறைகேடாக பெற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிப்பு
கடலூாில் 53 வீடுகளில் முறைகேடாக பெற்ற குடிநீர் குழாய் இணைப்புகளை நகராட்சி அதிகாாிகள் துண்டித்தனா்.
கடலூர்,
கடலூர் நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியில் வசிக்கும் மக்களில் பலர், நகராட்சி அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதனால் முறைகேடாக பெற்ற குடிநீர் குழாய் இணைப்புகளை உடனடியாக துண்டிக்கும்படி நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள 53 வீடுகளில் முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குடிநீர் குழாய் இணைப்புகளை அதிகாரிகள் துண்டிக்க முயன்றனர்.
அதற்கு அப்பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து முறைகேடாக பெற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் அணைத்தும் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story