பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
x
தினத்தந்தி 18 Sept 2021 10:27 PM IST (Updated: 18 Sept 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

வேலூர்

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

புரட்டாசி மாத சனி

புரட்டாசி மாதம் வெங்கடேச பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் மாதம் முழுவதும் பக்தர்கள் விரதம் இருந்து பூஜைகள் செய்வது வழக்கம். 

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி வேலூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, பூஜைகள் நடந்தன. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோவில், காட்பாடி சாலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், காட்பாடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. 

ஆனால் கோவில்கள் மூடப்பட்டு இருந்தன.

கோவிலுக்கு வெளியே தரிசனம்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு கோவிலுக்கு வந்தனர். கோவில்கள் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தததை கண்ட பக்தர்கள் வேதனை அடைந்து கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு வெளியே நின்று தரிசனம் செய்தனர்.

Next Story