தி.மு.க. பிரமுகர்களை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் கவுன்சிலரின் கணவர் உள்பட மேலும் 5 பேர் கைது
திண்டுக்கல்லில், தி.மு.க. பிரமுகர்களை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் கவுன்சிலரின் கணவர் உள்பட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில், தி.மு.க. பிரமுகர்களை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் கவுன்சிலரின் கணவர் உள்பட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை முயற்சி
திண்டுக்கல் பெரியகடை வீதியை சேர்ந்தவர்கள் பாபு மீரான் (வயது 33), விஜயராஜ் (40). தி.மு.க. பிரமுகர்களான இருவரும் கடந்த 15&ந்தேதி மதியம் 2.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சட்டாம்பிள்ளை தெருவில் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த விஜயராஜ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், பாபு மீரான் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் குறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், அதில் பதிவான காட்சிகளை துருப்பு சீட்டாக பயன்படுத்தி திண்டுக்கல் பெரியகடைவீதி பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் (29), அதே பகுதியை சேர்ந்த சாதிக் பாட்ஷா (48) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் 5 பேர் கைது
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் பெரியகடைவீதியை சேர்ந்த மாநகராட்சி 21&வது வார்டு முன்னாள் பெண் கவுன்சிலரின் மகன் மோகன்ராஜ் (31), தி.மு.க. பிரமுகர்கள் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்று கூறி சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து அவருடைய தந்தை விஜயகுமாரை (65) பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை முயற்சி வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அதே பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் (23), சிவசூரியன் (23), சுகுமார் (33), முகமது ஆரிப் (23) ஆகியோர் பதுங்கியிருக்கும் இடம் குறித்தும் போலீசாரிடம் விஜயகுமார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சஞ்சய்குமார் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story