எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கோவை
கோவை மரக்கடை, கெம்பட்டி காலனி, ஆசாத்நகர், சாரமேடு, அல்அமீன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் உக்கடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பொதுச்செயலாளர் அப்துல்காதர் பேசும் போது,
உக்கடம், கரும்புக்கடை, கெம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் தரமான தார் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது.
சாக்கடை கால்வாயில் அடைப்புகள் ஏற்பட்டு, தெருக் களில் கழிவுநீர் ஓடும் அவலம் உள்ளது. தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
தெருவிளக்குகள் எரிவது இல்லை. எனவே இந்த பகுதிகளுக்கு மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story