விவசாய நிலத்தில் மேய்ந்து வரும் வாத்துக்கள்


விவசாய நிலத்தில் மேய்ந்து வரும் வாத்துக்கள்
x
தினத்தந்தி 18 Sept 2021 10:31 PM IST (Updated: 18 Sept 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

திருவிளையாட்டம் கிராமத்தில் முட்டை உற்பத்திக்காக விவசாய நிலத்தில் வாத்துக்கள் மேய்ந்து வருகி¢ன்றன.

பொறையாறு:
திருவிளையாட்டம் கிராமத்தில் முட்டை உற்பத்திக்காக விவசாய நிலத்தில் வாத்துக்கள் மேய்ந்து வருகி¢ன்றன.
விவசாய நிலத்தில் மேய்ந்து வரும் வாத்துக்கள்
தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு அடுத்தப்படியாக ஆடு, மாடு, குதிரை, வாத்து, கோழி, புறா, முயல் ஆகியவற்றை வளர்த்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே செம்பனார்கோவில், உமையாள்புரம், திருவிளையாட்டம், மேமாத்தூர், பரசலூர், உள்ளிட்ட பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் வயல்களில் நடைபெற்று வந்தது. 
தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி விவசாய பணியை தொடங்க தயார் நிலையில் உள்ளனர். வாத்து வளர்க்கும் விவசாயிகள் வாத்துக்களை முட்டை உற்பத்தி செய்யும் வகையில் மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்து வருகின்றனர். வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக அறுவடை செய்த வயல்களில் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க கூடிய புழு, பூச்சிகள், நத்தைகள் ஆகியவற்றை உணவாக உட்கொண்டு வருகிறது. வாத்துக்களின் எச்சம் விளைநிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுவதால் விவசாயிகள் வாத்துக்களை மேய்ச்சலுக்காக அனுமதிக்கின்றனர். 
150 முதல் 250 முட்டைகள் 
இதுகுறித்து வாத்துக்கள் வளர்க்கும் விவசாயி கூறுகையில்:& 
ஆந்திர பகுதியில் நடவுப்பணி தொடங்கி உள்ளது. இதனால் நாங்கள் அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டார பகுதிக்கு வந்து வாத்துக்களை முட்டை உற்பத்திக்காக உழவு செய்த நிலங்களில் மேய்ச்சலுக்காக வாத்துக்களை விட்டு வளர்த்து வருகிறோம். வாத்துக்களில் கூஸ் எனப்படும் நாட்டு வாத்துக்கள் முட்டை உற்பத்திக்காக வளர்க்கப்படும் வாத்தாகும். இவ்வகை வாத்துக்கள் ஆண்டிற்கு 150 முதல் 250 முட்டைகள் வரை இடும். 
முட்டை உற்பத்தி 
வயல்களில் வாத்துக்கள் மேய்வதால் அதற்கென்று தனியாக தீவனம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தீவனம் கொடுத்தால் முட்டைகள் உற்பத்தி அதிகமாகும். வாத்துக்களில் காக்கி கேம்பல், இன்டியன் ரன்னர், மஸ்கவி, வெள்ளை பெக்கிலின், ரூவன், சீமை வாத்துக்கள் உள்ளிட்ட பலவகை வாத்து இனங்கள் உண்டு. சில வாத்துக்கள் முட்டை உற்பத்திக்காக மட்டும் வளர்க்கப்படுகிறது. நாட்டு வாத்துக்கள் முட்டை உற்பத்திக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகிறது. தற்போது வாத்துக்கள் முட்டை உற்பத்தி செய்து வருகிறது. 
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி 
காலையில் அறுவடை நிலங்களில் வாத்துக்களை மேய்ச்சலுக்காக விட்டுவிடுவோம். மாலையில் பாதுகாப்பாக பட்டியில் அடைத்துவிடுவோம். இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வாத்துக்கள் முட்டையிட்டிருக்கும். அந்த முட்டைகளை சேகரித்து வைத்துக்கொள்வோம். முட்டைகளை வாங்குவதற்கு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநில பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து கொண்டு போய்விடுவார்கள். அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது என்றார்.

Next Story