அத்தியாவசிய பொருட்கள் விலை உயா்வால் தொழிலில் பாதிப்பு


அத்தியாவசிய பொருட்கள் விலை உயா்வால் தொழிலில் பாதிப்பு
x
தினத்தந்தி 18 Sept 2021 11:04 PM IST (Updated: 18 Sept 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

சிமெண்ட் குழாய் உற்பத்திக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விலை உயா¢வால் அந்த தொழிலில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தாராபுரம்
சிமெண்ட் குழாய் உற்பத்திக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் அந்த தொழிலில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
விலை உயர்வு
தாராபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட சிமெண்ட் குழாய் தயாக்கும் நிறுவனங்கள் உள்ளன. அங்கு உற்பத்தி செய்யப்படும் சிமெண்டு குழாய்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் சாலை பணிகள், குளம் அமைக்கும் பணிகள், கட்டிட பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான குழாய்கள் இங்கு தயாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிமெண்ட் குழாய் தயா£¤க்க தேவையான அத்தியாவசி பொருட்களான சிமெண்டு, கட்டுமான கம்பிகள், ஜல்லி கற்கள் போன்றவற்றின் விலை உயா¢ந்துள்ளது. இதனால் இத்தொழில் செய்பவாகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனா.
இதுகுறித்து தாராபுரத்தை சோ்ந்த சிமெண்ட் குழாய் உற்பத்தியாளர் பைப் சாமிநாதன் கூறியதாவது:-
 தாராபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிமெண்ட் குழாய் உற்பத்தி நிறுவனங்களில் தயாரிக்கப்படும் சிமெண்ட் குழாய்கள் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.  கொரோனா பரவல் காரணமாக இத்தொழில் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பாதிப்புக்குள்ளானது. 
விலை உயர்வு
மணல், ஜல்லி விலை உயர்வால் தொழில் நிறுவனங்கள் தற்போது நிலை தடுமாறி வருகின்றன. சிமெண்டு மூட்டை விலை  உயா்ந்து விட்டது. ஜல்லி கற்கள் விலை இரு மடங்கு உயர்ந்து உள்ளது. அதுபோன்று கட்டுமான கம்பியின் விலை டன்னுக்கு 20 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டது. மேலும் மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால் சிமெண்டு குழாய் தயாரிக்க செலவு அதிகம் ஏற்படுகிறது. 
ஒரு குழாய் உற்பத்தி செய்து 28 நாட்கள் வைத்து இருந்துதான் அதனை விற்பனை செய்ய முடியும். அந்த கால இடைவெளியில் ஏற்படும் செலவுகளை உற்பத்தியாளா்கள்தான் ஏற்க வேண்டும். இவ்வாறு சிமெண்ட் குழாய் உற்பத்தியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதனால் சிமெண்டு குழாய் உற்பத்தி தொழில் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளது. எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுத்து சிமெண்ட் குழாய் உற்பத்தி செய்ய தேவையான மூலப் பொருட்களான சிமெண்ட், கட்டுமான கம்பி, ஜல்லி கற்கள் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்

Next Story