விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4-வது நாளாக 2,812 பேர் வேட்புமனு தாக்கல்


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4-வது நாளாக 2,812 பேர் வேட்புமனு தாக்கல்
x

வேட்புமனு

விழுப்புரம், 
விழுப்புரம் மாவட்டத்தில் 6, 097 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் முதல் நாளில் 65 பேரும், 2-ம் நாளில் 1, 143 பேரும், 3-வது நாளான நேற்று முன்தினம் 2,279 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் 4-வது நாளான நேற்று மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 5 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 46 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 266 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,220 பேரும் ஆக மொத்தம் ஒரே நாளில் 1,497 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் கடந்த 4 நாட்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 5, 308 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 15 பேர், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 297 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,575 பேர் என மொத்தம் 1,888 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று 4-வது நாளாக நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 32 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 194 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,088 பேர் என நேற்று ஒரே நாளில் 1,315 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கடந்த 4 நாட்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 491 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,663 பேர் என மொத்தம் 3,203 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

Next Story