சங்கராபுரம் ஒன்றியத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ 58500 பறிமுதல்


சங்கராபுரம் ஒன்றியத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ 58500 பறிமுதல்
x
தினத்தந்தி 18 Sept 2021 11:21 PM IST (Updated: 18 Sept 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் ஒன்றியத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ 58500 பறிமுதல்

சங்கராபுரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சங்கராபுரம் ஒன்றிய தேர்தல் பறக்கும்படை அலுவலரும், தனி வட்டாட்சியருமான ராஜலட்சுமி, போலீஸ் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ஏட்டு குமரன் ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று காலை சங்கராபுரம் அருகே குளத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.58 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் அரியலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை சங்கராபுரம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ரெத்தினமாலாவிடம் ஒப்படைத்தனர். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு உடன் இருந்தார்.



Next Story