விழிப்புணர்வு பேரணி
வத்திராயிருப்பில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. "ஆரோக்கிய வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்" என்ற கருத்தை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்களால் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று முத்தாலம்மன் பஜார் பகுதியில் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு பேரணியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீரலட்சுமி, மேற்பார்வையாளர் போஷன் அபியான், திட்ட உதவியாளர் எப்சிபாய், திட்ட ஒருங்கிணைப்பாளர் அகிலா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story