வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவர் கைது


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 18 Sept 2021 11:52 PM IST (Updated: 18 Sept 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
‌வெளிநாடுகளில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக தூத்துக்குடியில் பலரிடம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் கிடைத்தது.  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த மைக்கேல் ராஜ் (வயது 41) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் வெளிநாடுகளில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக அந்தோணி ரூபன் என்பவரிடம் ரூ.2 லட்சமும், மரிய ஜோஸ் ஸ்டானி என்பவரிடம் ரூ.3 லட்சத்து 30ஆயிரமும், முகமது ஜாபித்திடம் ரூ.50 ஆயிரமும், பிரியத் என்பவரிடம் ரூ.50 ஆயிரமும், மரிய அண்டோ ராஜன், மெக்வின், சிவகாசியை சேர்ந்த சுந்தரராஜ் ஆகியோரிடம் தலா ரூ.1 லட்சமும், சாமுவேல் பேட்ரிக் என்பவரிடம் ரூ.43 ஆயிரத்து300 என மொத்தம் 10 லட்சத்து 20 ஆயிரத்து 300 ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் மைக்கேல் ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story