இறந்தவர்களின் உடல்களை சொந்த காரில் கொண்டு செல்வதில் 50 ஆண்டுகளாக சேவை ஆலங்குடி முதியவருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு


இறந்தவர்களின் உடல்களை சொந்த காரில் கொண்டு செல்வதில் 50 ஆண்டுகளாக சேவை ஆலங்குடி முதியவருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
x
தினத்தந்தி 19 Sept 2021 12:05 AM IST (Updated: 19 Sept 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

இறந்தவர்களின் உடல்களை சொந்த காரில் கொண்டு செல்வதில் 50 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் ஆலங்குடி முதியவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் பாராட்டினார்.

புதுக்கோட்டை:
முதியவருக்கு பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 71). இவர் சொந்தமாக அம்பாசிடர் கார் வைத்துள்ளார். இவர் இந்த பகுதியில் விபத்தில் காயமடைந்தவர்கள், இறந்தவர்களின் உடல்களை தனது காரில் கொண்டு சென்று மருத்துவமனைக்கு சேர்ப்பது, அங்கிருந்து அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்வது என இதனையே சேவையாக கடந்த 50 ஆண்டுகாலமாக செய்து வருகிறார். இதனால் இந்த பகுதியில் உள்ள போலீசார் மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதுபோன்ற நேரங்களில் தங்களுக்கு உதவிக்கு இவரையே அழைப்பது உண்டு. இவர் யாரிடமும் பணம் கேட்பது கிடையாதாம். ஆனால் அவர்களாக பார்த்து தங்களால் முடிந்த தொகையை உதவிக்கு கொடுப்பது உண்டாம். இவர் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சேவையை தொடர்ந்து செய்து வந்த நிலையில், அவரை பாராட்டி கவுரவிக்க மாவட்ட காவல்துறையினர் முடிவு செய்தனர். அவரை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைத்து போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டி கேடயம் வழங்கினார். அவரும் நன்றி தெரிவித்து தனது தன்னலமற்ற சேவை குறித்து பேசினார்.
பத்மபூஷண்
முதியவர் கணேசன் இதுவரை விபத்து மற்றும் பல்வேறு சம்பவங்களில் காயமடைந்த மற்றும் இறந்து போனவர்களின் உடல்கள் சுமார் 6, 500 வரை தனது காரில் மருத்துவமனைக்கும், உடையவர்களின் வீட்டிற்கும் கொண்டு சேர்த்துள்ளார். இவருக்கு பத்மபூஷண் விருது கிடைக்கு பரிந்துரை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தனன்லமற்ற மக்கள் சேவையாற்றும் இவரை பலரும் பாராட்டினர்.
பெண் வக்கீலுக்கு பாராட்டு
புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் அங்கவி. இவர் பெண்கள் மற்றம் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகி திறமையாக வாதாடி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உள்பட பல்வேறு தண்டனைகளை பெற்றுத்தந்துள்ளார். இந்த பணியை பாராட்டி வக்கீல் அங்கவிக்கு போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கேடயம் வழங்கினார்.

Next Story