தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 Sept 2021 12:25 AM IST (Updated: 19 Sept 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

வடிகால் ஓடை அமைக்கப்படுமா?
பொற்றயடி கோட்டவிளை பகுதியில் உள்ள ஒரு தெருவில் வடிகால் ஓடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்குள்ள சாலையும் குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் ஓடை அமைத்து, சாலையை சீரமைக்க வேண்டும்.
                                     -பிரதீபா ராமசந்திரன், கோட்டவிளை.
துர்நாற்றத்தால் அவதி
மேலராமன்புதூர் டைமன்நகர் ரோடு பகுதியில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் குப்பைகள் நிறைந்து, கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                         -வினேஷ், மேலராமன்புதூர்.
விபத்து ஏற்படும் முன்பு கவனிப்பார்களா?
மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட திருநயினார்குறிச்சி ஏலா வழியாக ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கிறார்கள். தற்போது மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                             -சக்கின்ராபி, மணவாளக்குறிச்சி.
சாலை சீரமைக்கப்படுமா?
கொல்லங்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பாத்திமாபுரத்தில் இருந்து கொல்லங்கோட்டுக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் இலுப்பமூடு என்னும் பகுதியில் சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால், இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா? 
                                                     -அலெக்சாண்டர், இலுப்பமூடு.
சாலையில் தேங்கும் மழைநீர்
முழுக்கோடு பஞ்சாயத்துக்குட்பட்ட புண்ணியம் தரியில் இருந்து பொற்றிவிளை செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                              -அனில்குமார், புண்ணியம்.
சேதமடைந்த மின்கம்பம்
குளச்சல் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டு பி.எஸ்.புரம் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே புதிய மின்கம்பத்தை அமைக்க வேண்டும்.
                                                                       -முகமது சபீர், குளச்சல்.
ஜல்லிகள் பெயர்ந்த சாலை
கட்டிமாங்கோடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கல்லுவிளை ஊரில் இருந்து கல்லுவிளை எம்.ஜி.ஆர். காலனிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், நடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
                                                        -மணிகண்டன், கல்லுவிளை.



Next Story