பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x

புரட்டாசி சனிக்கிழமையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆலங்குளம்,
ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவில், கல்லமநாயக்கர் பட்டி சோலைமலை சுந்தராஜ பெருமாள் கோவில், எதிர்கோட்டை வேணுகோபால பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 
அதேபோல தளவாய்புரம் அருகே சொக்கநாதன்புத்தூர் மொட்டை மலையில் அமைந்துள்ள ஜனார்த்தன பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். முடிவில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி மலைக்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. எலுமிச்சங்காய்பட்டி சீனிவாச பெருமாள் கோவில், அச்சங்குளம் சீனிவாச பெருமாள் கோவில், கோமாளிபட்டி சீனிவாச பெருமாள் கோவில், ஏழாயிரம் பண்ணை காட்டு பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. 

Next Story