தேசிய புலனாய்வு அதிகாரிகள் மண்டபம் பகுதியில் தீவிர விசாரணை


தேசிய புலனாய்வு அதிகாரிகள் மண்டபம் பகுதியில் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 19 Sept 2021 12:56 AM IST (Updated: 19 Sept 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

தேசிய புலனாய்வு அதிகாரிகள் மண்டபம் பகுதியில் தீவிர விசாரணை

பனைக்குளம்
இலங்கையில் இருந்து மண்டபம் கடற்கரையில் அகதிகள் படகில் வந்து இறங்கிய பகுதியில் தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். மேலும் அகதிகளை மங்களூரு அழைத்துச்சென்ற 3 பேர் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
அதிகாரிகள் விசாரணை
இலங்கையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி பிளாஸ்டிக் படகுகளில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மரைக்காயர் பட்டினம் கடற்கரை மற்றும் தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் 38 பேர் வந்து இறங்கினர். இவ்வாறு வந்திறங்கிய இலங்கை சேர்ந்தவர்களை மங்களூருவுக்கு தப்பிச்சென்றனர். மங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 38 பேரை மங்களூரு போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் கைது செய்யபட்ட அகதிகள் சிலரை மண்டபம் மற்றும் தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதனிடையே மங்களூரு பாண்டீஸ்வரர் போலீஸ் நிலையத்தில் பதிவான இந்த வழக்கானது தற்போது தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இலங்கையிலிருந்து மண்டபம் வந்திறங்கிய அகதிகளை மண்டபம் மரைக்காயர் பட்டினம் மற்றும் வேத பகுதியை சேர்ந்த 3 பேர், கார் ஒன்றை ஏற்பாடு செய்து மங்களூரு அழைத்துச் சென்று சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 பேர் வீடுகளில் சோதனை
இந்தநிலையில் இலங்கையில் இருந்து மண்டபம் அருகே மரைக்காயர்பட்டிணம் கடற்கரையில் அகதிகள் வந்து இறங்கிய இடத்தையும் மற்றும் அகதிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்த மரைக்காயர்பட்டினம் மற்றும் வேதாளை சேர்ந்த 3 பேர் வீடுகளிலும் நேற்று தேசிய புலனாய்வு பிரிவினர் தீவிரமாக சோதனை நடத்தினர். 
இந்த 3 பேரின் முழு விவரங்கள் குறித்தும் மண்டபத்தில் உள்ள கியூ பிரிவு போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு பிரிவினர் சேகரித்து கொண்டனர்.

Next Story