ஏ.டி.எம். கார்டை மாற்றி பணம் எடுக்க முயன்றவர் கைது
ஏ.டி.எம். கார்டை மாற்றி பணம் எடுக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் மக்புல்பாஷா (வயது55). இவர் அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் பணம் எடுத்து கொடுக்க சொல்லி கேட்டுள்ளார். அந்த வாலிபர் கார்டை வாங்கி ஏ.டி.எம் எந்திரத்தில் செலுத்தி பணம் இல்லை என கூறி விட்டு கார்டை திருப்பி கொடுத்துவிட்டு வெளியே சென்று விட்டார். மக்புல்பாஷா ஏ.டி.எம். கார்டை வாங்கி பார்த்த போது கார்டு மாறி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த நபரை பல்வேறு இடங்களில் தேடியபோது மாரண்டஅள்ளியில் உள்ள வேறு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து அவரை மடக்கி பிடித்து மாரண்டஅள்ளி போலீஸ் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் ஓசூர் அடுத்த கொத்தகொண்டபள்ளி நஞ்சாபுரத்தை சேர்ந்த மஞ்சுநாத் (35) என தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story