திருச்சி டாக்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


திருச்சி டாக்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 19 Sept 2021 1:01 AM IST (Updated: 19 Sept 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி டாக்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


திருச்சி, செப்.19&
12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குழந்தைகள் நல டாக்டர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
டாக்டர் தம்பதி
திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் டாக்டர் ஒருவர் புகார் ஒன்று கொடுத்தார். அதில் தனது 12 வயதுடைய குழந்தைக்கு கணவரான குழந்தைகள் நல டாக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்பேரில், அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில்,  மகளை டாக்டரான தந்தையே பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது உறுதியானது.
குண்டர் சட்டம் பாய்ந்தது
அதன்பேரில், டாக்டர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 13&ந் தேதி, அந்த டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கைதான டாக்டர், பாலியல் குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வந்தது. அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவல்லி, அவரை ஓராண்டு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் அருணுக்கு சிபாரிசு செய்தார்.
அதை அவர் ஏற்று, டாக்டரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையினை இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவல்லி, சிறையில் உள்ள டாக்டரிடம் வழங்கினார்.

Next Story