மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Sept 2021 1:21 AM IST (Updated: 19 Sept 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

உடையார்பாளையம் அருகே மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடையார்பாளையம்:

சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் திருச்சி & சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் வசதி அமைக்காமல் சாலை அமைத்து வருகின்றனர்.
இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாத நிலை ஏற்படுகிறது என்று கூறி, அதனை கண்டித்தும், மழைநீர் வடிகால் ஏற்படுத்தக்கோரியும் அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) லதா, போலீசாருடன் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் தெரிவித்ததன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story