கர்நாடக போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை போராட்டம் - வழக்கம் போல் அரசு பஸ்கள் இயங்குமா?


கர்நாடக போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை போராட்டம் - வழக்கம் போல் அரசு பஸ்கள் இயங்குமா?
x
தினத்தந்தி 18 Sep 2021 9:38 PM GMT (Updated: 18 Sep 2021 9:38 PM GMT)

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை (திங்கட்கிழமை) பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெங்களூரு:

வேலை நிறுத்த போராட்டம்

கர்நாடகத்தில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.), கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி) உள்பட 4 அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இந்த போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் 6&வது ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும், தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பவன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அப்போது அரசு போக்குவரத்து ஊழியா¢கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. கொரோனா பரவலுக்கு மத்தியில் நடந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தனியார் பஸ்கள், வாகனங்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ் டிரைவர்கள் மூலமாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

பெங்களூருவில் நாளை தர்ணா

பின்னர் அரசு போக்குவரத்து ஊழியா¢களின் வேலை நிறுத்த போராட்டத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தலையிட்டது. கோர்ட்டு உத்தரவுப்படி ஊழியர்கள் வேலைக்கு திரும்பி இருந்தனர். ஆனாலும் ஊழியர்களின் சில கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சா£¢பில் வருகிற 20-ந் தேதி (அதாவது நாளை) பெங்களூரு சுதந்திர பூங்காவில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் நாளை (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஏப்ரல் மாதம் நடந்த போராட்டத்தின் போது விதிமுறைகளை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், ஏராளமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்கள். இதுதவிர பல ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்கள்.

மீண்டும் பணியில் சேர்க்க...

அரசின் உத்தரவை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார்கள். அத்துடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் பிடித்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும்.

ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எம்.டி.சி, கே.எஸ்.ஆர்.டி.சி. உள்பட 4 போக்குவரத்து கழகங்களின் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பஸ்கள் இயங்குமா?

4 போக்குவரத்து கழகங்களை சோ¢ந்த ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், அன்றைய தினம் மாநிலம் முழுவதும் எப்போதும் போல அரசு பஸ்கள் இயக்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போது பெங்களூரு விதானசவுதாவில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தர்ணா போராட்டத்திற்கு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் அழைப்பு விடுத்திருப்பதாக தெரிகிறது.

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் குதிக்க இருப்பது பயணிகளிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story