மேட்டூரில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு


மேட்டூரில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
x
தினத்தந்தி 19 Sept 2021 4:18 AM IST (Updated: 19 Sept 2021 4:18 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூரில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.

மேட்டூர்:
மேட்டூரில் இருந்து காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே செல்லும் இந்த குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்று நிலையத்தில் தண்ணீர் நீர் ஏற்றும் மோட்டார்களை நிறுத்தினர். பின்னர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே இது குறித்து தகவலறிந்த சதாசிவம் எம்.எல்.ஏ. சீரமைப்பு பணிகள் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த பணியை முடித்து கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு விரைந்து தண்ணீரை அனுப்புமாறு கூறினார்.

Next Story