மதுராந்தகம் பஸ் நிலையத்தில் ஆண் பிணம்


மதுராந்தகம் பஸ் நிலையத்தில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 19 Sept 2021 5:52 PM IST (Updated: 19 Sept 2021 5:52 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பஸ் நிலையத்திற்குள் கழிவறை அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக மதுராந்தகம் கிராம நிர்வாக அலுவலர் மதுராந்தகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ்யிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இறந்த நபர் லுங்கியும் பச்சை நிறத்தில் பனியனும் அணிந்திருந்தார்.

Next Story