பயிர் அறுவடை பரிசோதனை புத்தூட்ட பயிற்சி முகாம்


பயிர் அறுவடை பரிசோதனை புத்தூட்ட பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 19 Sept 2021 6:19 PM IST (Updated: 19 Sept 2021 6:19 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பயிர் அறுவடை பரிசோதனை புத்தூட்ட பயிற்சி முகாம் நடந்தது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களுக்கான பயிர் அறுவடை பரிசோதனை தொடர்பான புத்தூட்ட பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி முகாமிற்கு மாவட்ட வேளாண்மை இயக்குனர் எஸ்.ஐ. முகைதீன், நெல்லை மண்டல புள்ளியியல் இயக்குனர் ஹரிஹர தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் பாஸ்கரன், வேளாண் துணை இயக்குனர் பழனி வேலாயுதம், புள்ளியியல் துணை இயக்குனர் சத்யநாராயணன், நெல்லை தேசிய மாதிரி ஆய்வு அலுவலக உதவி இயக்குனர் ஜெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உணவு தானிய உற்பத்தி திறனை நிர்ணயிக்கும் பொருட்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள், பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினர். ஏற்பாடுகளை கோவில்பட்டி புள்ளியியல் இயக்குனர் சுந்தரி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். கூட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், பயிர் பரிசோதனை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story