திருவள்ளூர் மாவட்டம் வாணிவிலாசபுரம் கிராமத்தில் கோஷ்டி மோதல்; 6 பேர் கைது


திருவள்ளூர் மாவட்டம் வாணிவிலாசபுரம் கிராமத்தில் கோஷ்டி மோதல்; 6 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2021 7:05 PM IST (Updated: 19 Sept 2021 7:05 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வாணிவிலாசபுரம் கிராமத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிலரிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன் தேர்தல் பகை காரணமாக அவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து தடிகளால் தாக்கிக் கொண்டனர்.

இதில் ஒரு கோஷ்டியைச் சேர்ந்த ஹரி பாபு, பாபு மற்றொரு கோஷ்டியை சேர்ந்த வினித், சாரதி, விஜய், தட்சிணா மூர்த்தி ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தடிகளால் தாக்கிய சம்பவத்தில் வினித் (வயது 26) , தட்சிணாமூர்த்தி (48), கார்த்திக் (39), மற்றொரு கோஷ்டியை சேர்ந்த யுவராஜ் (23), பாஸ்கர் (38), மற்றொரு கார்த்திக் (35) ஆகியோரை கைது செய்து பள்ளிப்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் செய்து அவர்களை திருத்தணி சிறையில் அடைத்தனர். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story