மண், நீர்வளம் பாதுகாப்பு ஆராச்சி மையம் சார்பில் மரம் வளர்ப்பு குறித்து பிரசார கூட்டம்
மண், நீர்வளம் பாதுகாப்பு ஆராச்சி மையம் சார்பில் மரம் வளர்ப்பு குறித்து பிரசார கூட்டம்
ஊட்டி
மத்திய அரசின் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் சார்பில் ஊட்டியில் ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் மரம் வளர்ப்பு குறித்த பிரசார கூட்டம் குருத்துக்குளி கிராமத்தில் நடைபெற்றது.
எனது கிராமம் எனது பெருமை என்ற திட்டத்தின் கீழ் உலக சிறுதானிய வருடம் 2023 கொண்டாடும் விதமாக நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி சுதிர் குமார் ஒருங்கிணைத்து நடத்தினார். விஞ்ஞானி கஸ்தூரி திலகம் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து முதன்மை விஞ்ஞானி க.ராஜன் சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் அதன் நன்மைகளை பற்றியும், முதன்மை விஞ்ஞானி ராஜா மரம் வளர்ப்பு மற்றும் அதன் நன்மைகள், குறிப்பாக காலநிலை மாற்றத்தில் அதன் பங்கு பற்றியும் பேசினார்.
இதையடுத்து பேசிய மையத்தின் தலைவர் சுந்தராம்பாள் பயிர் சுழற்சியில் சிறுதானியங்களையும் சேர்த்துக்கொண்டு மண்ணின் வளத்தை பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் குருத்துக்குளி கிராமத்தில் பல இடங்களில் மரகன்றுகளை விஞ்ஞானி மற்றும் விவசாயிகள் நட்டு வைத்தனர். இந்த கூட்டத்தில் ஊர் தலைவர்கள் பாலைய்யா, ராகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story