எரிசிபெட்டா கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு


எரிசிபெட்டா கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு
x
தினத்தந்தி 19 Sept 2021 8:13 PM IST (Updated: 19 Sept 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

எரிசிபெட்டா கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள எரிசிபெட்டா கிராமத்தில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மிளிதேன் பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து வனப்பகுதி வழியாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வந்தது. 

இதனால் அடிக்கடி எரிசிபெட்டா கிராமத்தில் மின்தடை மற்றும் மின்னழுத்த குறைபாடு பிரச்சினையும் நிலவிது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எரிசிபட்டா கிராமத்தில் ரூ.9 லட்சத்தில் உதவி பொறியாளர் கமல்குமார், வணிக ஆய்வாளர் சக்திவேல், வணிக உதவியாளர் அசோக் தலைமையில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. 

தொடர்ந்து மின்மாற்றி திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். குன்னூர் செயற்பொறியாளர் சேகர், கோத்தகிரி உதவி செயற்பொறியாளர் மாதன், மின்பாதை ஆய்வாளர் புகழேந்தி, எரிசிபெட்டா ஊர் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 தொடர்ந்து மழைக்காலங்களில் ஏற்படும் மின் விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Next Story