வீட்டின் ஜன்னலை உடைத்து 4 பவுன் நகை திருட்டு


வீட்டின் ஜன்னலை உடைத்து 4 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 19 Sept 2021 8:13 PM IST (Updated: 19 Sept 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் ஜன்னலை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

பந்தலூர்

பந்தலூர் தாலுகா பாடவயல் அருகே கொட்டாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவபாக்கியம் (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். 

பின்னர் நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 4 பவுன் திருடப்பட்டிருந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த சிவபாக்கியம், அம்பலமூலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story