மின்னல் தாக்கி விவசாயி பலி


மின்னல் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 19 Sept 2021 9:46 PM IST (Updated: 19 Sept 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள கீழ பாண்டவர் மங்கலம், தெற்கு காலனியை சேர்ந்தவர் எட்டப்பன் (வயது 53). விவசாயி. நேற்று மாலையில் விவசாய நிலத்திற்கு சென்றவர், இடி மின்னலுடன் மழை வருவதை பார்த்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது  மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே எட்டப்பன் பலியானார்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மின்னல் தாக்கி பலியான எட்டப்பனுக்கு மாரியம்மாள் (48) என்ற மனைவியும், சுந்தரி (26), சுமித்ரா (23), என்ற 2 மகள்களும், சுபாஷ் (20) என்ற மகனும் உள்ளனர்.

Next Story