நிதி நிறுவன ஊழியர் தற்கொலை
திண்டுக்கல் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது பாட்டி ஊரான வேடசந்தூரை அடுத்த கூத்தாங்கல்பட்டிக்கு தாய் தமிழரசியுடன் சென்று தங்கினார். நேற்று காலை வீட்டு முன்பு இருந்த புளியமரத்தில் சுரேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், அவருடைய உறவினர்கள் இறுதி சடங்கு செய்து கூத்தாங்கல்பட்டியில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் உடலை தகனம் செய்தனர்.
தகவலறிந்த கைத்தியன்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் தேவி கூம்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story