இந்து முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்து முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்து முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த்தை தாக்கிய சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கி பேசினார்.
பொதுச்செயலாளர் செந்தில், செயலாளர் ஹரி, அமைப்பாளர் மணி, இளைஞர் அணி தலைவர் தாமு, மாவட்ட செயலாளர் ஹரிகரசுதன், அமைப்பாளர் சாமிகண்ணன், இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஸ்ரீகாந்த்தை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story