இந்து எழுச்சி நாள் விழா
இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் பிறந்தநாளை இந்து எழுச்சி நாள் விழாவாக திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்:
இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் பிறந்தநாளை இந்து எழுச்சி நாள் விழாவாக இந்து முன்னணியினர் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ராமகோபாலனின் பிறந்த நாளான நேற்று இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.
துணை தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்வேல், சீனிவாசன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். விழாவில் ராமகோபாலனின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story