வாணியம்பாடி அருகே பிணத்துடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்
வாணியம்பாடி அருகே சுடுகாட்டுக்கு வழியில்லாததால் பிணத்துடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே சுடுகாட்டுக்கு வழியில்லாததால் பிணத்துடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வழியில்லை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா, அம்பலூரை அடுத்த புல்லூர்& மோட்டூர் கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் வசித்து வந்த கோவிந்தராஜ் (65) என்பவர் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். அவருடைய உடலை அடக்கம் செய்ய வழக்கம்போல் பாலாற்றின் வழியே எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.
தற்போது பெய்துள்ள கன மழையால் பாலாற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இதனால் அருகில் உள்ள நிலத்தின் வழியாக உடலை எடுத்துச் செல்வதற்காக கேட்டுள்ளனர். ஆனால் அதன் உரிமையாளர் மறுத்துள்ளார்.
சாலை மறியல்
இதனால் பிணத்தை நடுரோட்டில் வைத்து அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பட்டா நிலத்தின் உரிமையாளரிடம், அம்பலூர் வருவாய் ஆய்வாளர் சித்ரா தலைமையில், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட்டப்பட்டதால், இந்த ஒரு முறை மட்டும் நிலத்தின் வழியாக இறந்த நபரின் உடலை கொண்டு செல்ல அனுமதி அளித்தனர்.
இதனை அடுத்து இறந்த நபரின் உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story